மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

படுதார்கொல்லை கிராமப்புற சாலைகளை முழுமையாக புதுப்பிக்க வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல்

திருப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட படுதார்கொல்லை கிராமத்துக்கு செல்லும் பிரதான சாலை, கிராம உட்புறச் சாலைகளை முழுமையாக புதுப்பிக்கவேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

திருப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட படுதார்கொல்லை கிராமத்துக்கு செல்லும் பிரதான சாலை, கிராம உட்புறச் சாலைகளை முழுமையாக புதுப்பிக்கவேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
காரைக்கால் பகுதியில் நிரவி - திருப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட படுதார்கொல்லை கிராமம் தமிழக எல்லையையொட்டியுள்ளது. இக்கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. பிரசித்திப் பெற்ற ஸ்ரீ ராஜசோளீசுவரர் கோயிலும், சோப்பு தயாரிக்கும் தனியார் நிறுவனங்களும் இந்த பகுதியில் உள்ளன. இந்த பகுதியில் 45 ஏக்கர் பரப்பில் ஏரி வெட்டும் பணி  தொடங்கப்பட்டுள்ளது.
திருப்பட்டினம் வழியாக படுதார்கொல்லைக்கு செல்லும் ஒரு வழியும், தமிழகப் பகுதியான வாழ்மங்கலத்திலிருந்து செல்லும் வழியும் உள்ளன. இதில் திருப்பட்டினம் பகுதியிலிருந்து 2 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பிரதான  சாலை மிகவும் மோசமாக சிதிலமடைந்து காணப்படுகிறது. சாலைகளில் அதிகமான பள்ளங்கள், இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு மிகுந்த சிரமத்தைத் தருவதாக கூறுகின்றனர் அந்த பகுதியினர்.
இதனால் தமிழகப் பகுதியான வாழ்மங்கலத்திலிருந்து படுதார்கொல்லைக்கு பயணிக்கவேண்டியிருப்பதாக கிராமத்தினர் கூறுகின்றனர். பிரதான சாலை மட்டுமன்றி, கிராமத்தின் அனைத்து உட்புறச் சாலைகளும் மிக மோசமாக இருப்பதாகவும், ஏரி வெட்டும்  பணி தொடங்கப்பட்டபோது லாரிகள் போக்குவரத்தால் சாலை மிக மோசமாகிவிட்டதாக தெரிவிக்கின்றனர்.
படுதார்கொல்லை கிராமத்தில் எந்தவொரு கடைகளும் கிடையாது. இக்கிராம மக்களுக்கான ரேஷன் கடையும் திருப்பட்டினத்தில்தான் உள்ளது. பள்ளி செல்வோர், பணிக்குச் செல்வோர் என அனைத்துத் தரப்பினரும் படுதார்கொல்லையிலிருந்து வெளியேற முற்படும்போது, சாலை சீர்கேட்டால் கடும் அவதிப்படவேண்டியுள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் பயணிப்போர் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர் என கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சிறப்பு கவனம்  செலுத்தி, இக்கிராமச் சாலைகளை புதுப்பிக்க விரைவு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெரும்பான்மையினர் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜான் அரேலியஸ் கூறும்போது, படுதார்கொல்லையில் சட்டப் பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் சில உட்புறச் சாலைகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பிரதான சாலை உள்ளிட்ட சில சாலைகள் பொதுப்பணித்துறையால் செய்யப்படவேண்டும். அண்மையில் வேளாண் அமைச்சர் படுதார்கொல்லை கிராமத்துக்கு வந்து ஏரியை பார்வையிட்டபோது, சாலைகள் புதுப்பிக்கவேண்டியதன் அவசியத்தை சட்டப் பேரவை உறுப்பினர் அவரிடம் விளக்கிக் கூறினார். அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசுத்துறையினரை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார் என்றார்.
காரைக்கால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலர் எஸ்.எம்.தமீம் கூறும்போது, படுதார்கொல்லை சாலையை சீரமைக்க வலியுறுத்தி அண்மையில் திருப்பட்டினம் பகுதி இளைஞர் பெருமன்றத்தினர், பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு மலர்வளையம் வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். பொதுப்பணித்துறையினர் 3 மாத காலத்திற்குள் புதுப்பிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். அடுத்த 3 மாதத்தில் பருவமழை தொடங்கிவிடும். இந்த காலத்தில் சாலைகள் மேலும் மோசமடைந்துவிடும். இந்த பகுதியில் விளைநிலங்கள் உள்ளன. விவசாயிகள் இந்த சாலைகளை பயன்படுத்த நேரிடும். பல்வேறு நிலைகளை ஆராய்ந்து, அடுத்த மாதமே சாலைப் பணியை தொடங்குவதற்கேற்ப அரசிடம் பேசி
நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.