கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பாசன வாய்க்கால்களில் கழிவுநீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை

காரைக்கால் மாவட்டத்தில் வீடுகள், திருமண மண்டபங்களிலிருந்து கழிவுநீரை, பாசன வாய்க்கால்களில்

Updated On :25 டிசம்பர் 2018, 6:04 am IST

காரைக்கால் மாவட்டத்தில் வீடுகள், திருமண மண்டபங்களிலிருந்து கழிவுநீரை, பாசன வாய்க்கால்களில் வெளியேற்றுவது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கேசவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் வீடுகள், வியாபார நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபத்திலிருந்து கழிவுநீரை பாசன வாய்க்கால்கள் மற்றும் நீர் நிலைகளில் வெளியேற்றுவதாக தெரியவருகிறது. இதனால் நீர் நிலைகள் மிகவும் மாசு அடைவது மட்டுமல்லாமல், சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும், சிலர் சாக்கடைகளில் குப்பைகளை கொட்டுவதால், அடைப்பு ஏற்பட்டு சீரான ஓட்டம் தடைப்பட்டு நீர்த் தேங்கி சுகாதாரச் சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறது.
எனவே, இந்த அறிவிப்பு வெளியிட்ட 15 நாள்களுக்குள் பொதுமக்கள், வியாபாரிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் மேற்கூறிய தவறுகளை சரி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறார்கள். மேலும், இதுதொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களில் தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம்.
காரைக்கால் நகராட்சி-221427, திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து - 236630, நெடுங்காடு-261282, கோட்டுச்சேரி-265451, நிரவி-238584, திருப்பட்டினம்-233479. மேலும், 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.