ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

நவோதய வித்யாலயா 9-ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

நவோதய வித்யாலயாவில் 9-ஆம் வகுப்புக்கு காலியான இடங்களுக்கு மட்டும், மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2018, 9:22 pm

DIN

நவோதய வித்யாலயாவில் 9-ஆம் வகுப்புக்கு காலியான இடங்களுக்கு மட்டும், மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் ஜவஹர் நவோதய வித்யாலயா பள்ளி முதல்வர் பா.ஹெலன்மேரி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதி ராயன்பாளையத்தில் அமைந்துள்ள ஜவஹர்  நவோதய வித்யாலயா பள்ளியில், 9-ஆம் வகுப்பில் காலியான இடங்களுக்கு மட்டும் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் சமர்ப்பிப்பு மார்ச் 1 முதல் தொடங்கியுள்ளது.  என்விஎஸ் வலைதளத்தை அணுகுவதன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் ஏப்ரல் 5-ஆம் தேதிக்குள் வந்துசேரவேண்டும். தெரிவு நிலைத் தேர்வு 19.5.2018 நடைபெறுகிறது. தேர்வை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதவேண்டும். சேர்க்கைக்கான கல்வித் தகுதியாக, மாணவர்கள் காரைக்கால் மாவட்டத்தில் 8-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருத்தல் அவசியம். 1.5.2002 -லிருந்து 30.4.2006-க்குள் பிறந்தவராக இருக்கவேண்டும். ஜவஹர் நவோதய வித்யாலயா அல்லது நுழைவுச் சீட்டில் குறிப்பிட்ட இடத்தில் தேர்வு நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு காரைக்கால் நவோதய வித்யாலயா பள்ளியை அணுகி தெரிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.