காரைக்கால் கைலாசநாதர் கோயில், நித்யகல்யாண பெருமாள் கோயில் சுவர்களில் அம்மையார் வாழ்க்கை வரலாறு மற்றும் ரங்கநாதர் சயனக் கோல ஓவியம் வரையப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.
காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் அறங்காவல் குழுவினர், பாரதியார் சாலையோரத்தில் உள்ள காரைக்கால் அம்மையார் கோயில், ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் ஆகியவற்றின் வாயிலில், பெயர்ப் பலகை எல்இடி விளக்குடன் அமைக்கவும், அம்மையார் வாழ்க்கை வரலாறு குறித்த ஓவியத்தை, கோயில் மற்றும் குளத்தின் சுவரில் வரையவும் ஏற்பாடு செய்தனர்.
இந்த திட்டத்துக்கு ரூ. 7 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், நன்கொடையாளர்கள் உதவியுடன் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்து பணிகள் தொடங்கப்பட்டன. முதல்கட்டமாக பாரதியார் சாலையை நோக்கி கைலாசநாதர் கோயில் சுவரில் ஒரு புறத்தில் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வண்ண ஓவியம் வரையும் பணி தொடங்கப்பட்டு, கடந்த மாதம் புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி காரைக்கால் வந்தபோது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.
இக்கோயிலின் 2-ஆவது புற சுவரில் அம்மையாருக்கு இறைவன் காட்சித் தருவதை தத்ரூபமாக விளக்கும் ஓவியம் வரையப்பட்டுள்ளது. மேலும், பாரதியார் சாலையை நோக்கி ராஜகோபுரம் கொண்டிருக்கும் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் சுவரில், சயனக் கோலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ ரங்கநாதர் உருவமும், ரங்கநாயகித் தாயார் உருவமும், வஜ்ராங்கியில் உத்ஸவர் நித்யகல்யாண பெருமாள் ஓவியமும் வரையப்பட்டுள்ளன.
கைலாசநாதர் கோயில் தேரோட்ட நிகழ்வு வியாழக்கிழமை இருப்பதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பார்வைக்காக இந்த ஓவியங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டது. காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா கலந்துகொண்டு ஓவியங்களைத் திறந்துவைத்தார். கைலாசநாதர் கோயில் அறங்காவல் குழுவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். வாகனப் போக்குவரத்துப் பகுதியை நோக்கிய கோயில் சுவர்கள் பாழடைந்து காணப்பட்ட நிலையில், இந்த சுவர்களில் அந்தந்த கோயில்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் வண்ண ஓவியம் வரையப்பட்டிருக்கும் காட்சி, பொதுமக்களால் வரவேற்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலங்கானாவில் மருந்து ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி, 8 பேர் காயம்

ராயல் என்ஃபீல்டு விற்பனை 31 சதவீதம் அதிகரிப்பு!

மமதா தோல்வி அடையப்போகும் விரக்தியில் உள்ளார்: சுவேந்து அதிகாரி

ரியான் பராக், டோனோவன் ஃபெரைரா அதிரடி; தில்லி கேபிடல்ஸுக்கு 226 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

