கோடை வெயில் பாதிப்புகளைத் தவிர்க்க, கால்நடைகளை குளிர்ந்த பகுதியில் வளர்க்க முன்வரவேண்டும் என கால்நடைத் துறை அலுவலர் அறிவுறுத்தினார்.
கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் திருநள்ளாறு தொகுதி தென்பிடாகை கிராமத்தில் கால்நடைகள் மற்றும் கோழிகள் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. இக்கண்காட்சியில் சுமார் 100 கறவை மாடுகள், 70 கன்றுகள், 60 கோழிகள் மற்றும் சண்டைக்கோழி இனங்கள், வாத்து, புறா உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.
கால்நடை மருத்துவர்கள் கோபிநாத், சுரேஷ் மற்றும் உதவியாளர் கண்ணதாசன் உள்ளிட்டோர் கால்நடைகள் ஆரோக்கியத்தை பரிசோதித்து, கால்நடை வளர்ப்போருக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் கால்நடைத் துறை இணை இயக்குநர் ஜி.லதா மங்கேஷ்கர் கலந்துகொண்டு முதல், இரண்டாம், மூன்றாம் நிலையில் கால்நடைகளுக்கான பரிசுகளை வழங்கினார். மேலும் கண்காட்சியில் இடம்பெற்ற அனைத்து இனங்களுக்குமான பரிசுகளை அவர் வழங்கிப் பேசினார்.
கால்நடை வளர்ப்புக்கு உரிய ஆர்வத்தை கால்நடைத்துறை அளித்துவருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் ஆடு, மாடு, கோழிகள் வளர்ப்பில் மக்கள் ஆர்வம் செலுத்தவேண்டும். கால்நடைகள் அனைத்துமே சுயவருவாயை நமக்கு ஈட்டித்தர வல்லது. கால்நடைத் துறையில் உள்ள அரசுத் திட்டங்களை மக்கள் நன்கு அறிந்துகொள்ள முன்வரவேண்டும்.
குறிப்பாக கால்நடைகளுக்கு உரிய காலத்தில் தடுப்பூசி போடவேண்டும். கால்நடைகள் உடல் ரீதியில் சுணக்கமாக காணப்பட்டால், கால்நடை மருத்துவரை அணுகி தெரிவித்து உரிய ஆலோசனை பெறவேண்டும். தற்போது கோடை வெயில் வேகம் அதிகரித்துள்ளதால், கால்நடைகளை வெயிலில் நடமாட விடுவதோ, கட்டிப்போடுவதோ கூடாது. குளிர்ச்சியான பகுதியில் வளர்ப்பு செய்யவேண்டும்.
இதன் மூலம் கால்நடைகளுக்கு கோடைகாலத்தில் வரக்கூடிய நோய்களைத் தவிர்க்கலாம். வரும் காலங்களில் நடக்கும் இதுபோன்ற கண்காட்சியில் இப்போதைய அளவைக் காட்டிலும் இரட்டிப்பு அளவில் கால்நடைகள் பங்கேற்கவேண்டும். அதற்கேற்ப கால்நடை வளர்ப்பு ஆர்வலர்கள் செயலாற்றவேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தபால் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்குப் பயிற்சி

அறுந்துகிடந்த மின் கம்பியை தொட்டதில் சா்க்கரை ஆலை தொழிலாளி உயிரிழப்பு

சிவகிரி வேலாயுதசுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

நாகரிகத்தின் அடையாளம் சுகாதாரம்!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

