காரைக்கால் கடற்கரையில் வணிக வளாகத்தை சுற்றுலா விடுதியாக உருமாற்றம் செய்யும் பணி நிறைவுபெற்ற நிலையில், இதனை மத்திய அரசு சார்பு நிறுவனமான ஐ.டி.டி.சி. ஏற்று நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
காரைக்கால் கடற்கரையில் புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறை சார்பில் மத்திய சுற்றுலாத்துறை நிதியுதவியில், கடற்கரைக்கு வரும் மக்கள் பயன்படும் வகையில் வணிக வளாகம் கட்டப்பட்டது. இது ஏறக்குறைய ரூ.3.5 கோடியில் 30 கடைகளுடன் கட்டப்பட்ட கட்டடம் முறைப்படி துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆகியோரால் 2012-ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.
கடைகள் ஏல முறையில் வியாபாரிகளிடம் ஒப்படைத்தும், ஒருவர்கூட 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் தொடங்க முன்வரவில்லை. இதனால் இந்த வளாகத்தை சுற்றுலாவினர் தங்கும் விடுதியாக உருமாற்றம் செய்திட புதுச்சேரி அரசு திட்டம் வகுத்து, மத்திய சுற்றுலாத்துறையிடம் ஒப்புதல் பெற்றது. இதற்காக மேலும் சுமார் ரூ.3 கோடி பெறப்பட்டு 2015-ஆம் ஆண்டு 20 தங்கும் விடுதி, 4 சூட் வசதியுடன் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வி.சண்முகசுந்தரத்தை புதன்கிழமை தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியது :
காரைக்கால் கடற்கரையில் வணிக வளாகத்தை விடுதியாக தரம் உயர்த்தும் கட்டுமானம் முழுமையாக நிறைவடைந்துவிட்டது. இந்த விடுதியை மத்திய அரசு சார்பு நிறுவனமான இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (ஐ.டி.டி.சி) ஏற்று நடத்த சுற்றுலாத்துறைக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோப்புகள் சுற்றுலா செயலர் ஒப்புதல் பெற்று தலைமைச் செயலருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேற்கொண்டு கிடைக்கவேண்டிய ஒப்புதல் யாவும் வந்துவிட்டால், புதுச்சேரி காலாப்பேட்டில் ஐ.டி.டி.சி. நடத்தும் அசோக் ஹோட்டல் போல காரைக்கால் கடற்கரை சுற்றுலா விடுதியும் வந்துவிடும். இது அடுத்த ஓரிரு மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.
காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, என்.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளதால், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து காரைக்கால் வருகின்றனர். இவர்கள் உள்ளிட்ட சுற்றுலாவினருக்கு கடற்கரை விடுதியில் தங்குவது முழு மனத்திருப்தியை ஏற்படுத்தும். இதுகுறித்து காரைக்கால் பகுதியைச் சேர்ந்த வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், சுற்றுலாத்துறை அமைச்சருடன் பேசி இதற்கான தீர்வை ஏற்படுத்தவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புறநகர் சென்னையை மிரட்டும் கோடை வெய்யில்! இது வெறும் ஆரம்பம்தானா?

தங்கம், வெள்ளி விலை உயர்வு: எவ்வளவு?

அனிஷ்மா, ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகும் ’மொத ராத்திரி’ திரைப்படம்!
திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வேலைநிறுத்தம்! படப்பிடிப்புகள் ரத்து
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

