தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

திருப்பட்டினம் குடியிருப்புப் பகுதிகளில் தார்ச்சாலைப் பணிகள்: கீதாஆனந்தன் ஆய்வு

திருப்பட்டினத்தின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் நடைபெற்றுவரும் தார்ச் சாலை அமைப்புப் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் திங்கள்கிழமை பார்வையிட்டார்.

Updated On :21 மே 2018, 7:05 pm

திருப்பட்டினத்தின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் நடைபெற்றுவரும் தார்ச் சாலை அமைப்புப் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் திங்கள்கிழமை பார்வையிட்டார்.
நிரவி-திருப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட திருப்பட்டினம் வட்டாரத்தில் பல சாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமல், ஆங்காங்கே சிதிலமடைந்து, போக்குவரத்துக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக அந்தந்தப் பகுதியினர் சட்டப்பேரவை உறுப்பினரிடம் புகார் தெரிவித்தனர்.
குறிப்பாக வரதராஜப் பெருமாள் கோயில் தெரு, கீழத்தெரு, சிவன் கோயில் தெற்குத் தெரு ஆகிய பகுதிகள் மிக மோசமாக இருந்த நிலையில், சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.21 லட்சத்தில் சாலைகளை மேம்படுத்த பேரவை உறுப்பினர் நிதி ஒதுக்கீடு செய்தார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாலைப் பணிகளை திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் புதுப்பிக்கத் தொடங்கியது. இதில் தற்போது தார்ச்சாலை மேம்படுத்தும் பணிகள் நடந்துவருகின்றன.
இப்பணியை சட்டப்பேரவை உறுப்பினரும், புதுச்சேரி மின் திறல் குழுமத் தலைவருமான கீதாஆனந்தன் திங்கள்கிழமை பார்வையிட்டார்.
கொம்யூன் பஞ்சாயத்து பொறியாளர்கள் குழுவினர், தார்ச்சாலையின் தரம் குறித்தும், பணிகளின் நிறைவு காலம் குறித்தும் பேரவை உறுப்பினருக்கு விளக்கிக் கூறினர். பொறியாளர்கள் குழுவினர் பணிகளைத் தீவிரமாகக் கண்காணிக்கவேண்டும். பணிகளை விரைவாக செய்து முடிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
நீண்ட காலமாக குடியிருப்புப் பகுதியில் இதுபோன்ற தார்ச்சாலையை காணமுடியாத நிலை இருந்ததாகவும், தரமான முறையில் சாலை அமைப்புக்கு நடவடிக்கை எடுத்தமைக்காக, பேரவை உறுப்பினரை அந்தப் பகுதி குடியிருப்புவாசிகள் பலர் சந்தித்து நன்றிதெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.