கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

திருமணமாகி ஒன்றரை மாதத்தில் பெண் சாவு: வட்டாட்சியர் விசாரணை

காரைக்காலில் திருமணமாகி ஒன்றரை மாதத்தில் பெண் உயிரிழந்தது தொடர்பாக வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார். 

Updated On :8 அக்டோபர் 2018, 7:40 am IST

காரைக்காலில் திருமணமாகி ஒன்றரை மாதத்தில் பெண் உயிரிழந்தது தொடர்பாக வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார். 
காரைக்கால் சின்னக்கோவில்பத்துப்பேட் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் கூட்டுறவு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் பேரளம் அருகே உள்ள மகாராஜபுரத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (22) என்பவருக்கும் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஜெயஸ்ரீ ஏற்கெனவே மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து நகர காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணமாகி ஒன்றரை மாதமே ஆவதால், துணை வட்டாட்சியர் நம்புதிரி திரிபாதி விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.