இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

நவராத்திரி கொலு தர்பார் காட்சி நாளை தொடக்கம்

நவராத்திரியையொட்டி, 10 நாள்கள் நடைபெறும் நவராத்திரி கொலு தர்பார் காட்சி செவ்வாய்க்கிழமை (அக். 9) தொடங்கவுள்ளது.

Updated On :8 அக்டோபர் 2018, 7:40 am IST

நவராத்திரியையொட்டி, 10 நாள்கள் நடைபெறும் நவராத்திரி கொலு தர்பார் காட்சி செவ்வாய்க்கிழமை (அக். 9) தொடங்கவுள்ளது.
கோயில்கள், வீடுகளில் நவராத்திரியையொட்டி கொலு வைத்து வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இதேபோன்று காரைக்காலில் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் விரிவான முறையில் நவராத்திரி கொலு தர்பார் அமைப்பு செய்யப்பட்டு, மக்கள் தினமும் சென்று கொலுவை பார்த்துச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம்.
நிகழாண்டு இந்த நிகழ்ச்சி அக். 9  முதல் 18 -ஆம் தேதி வரை நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி, செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு கொலு தர்பார் காட்சியை திருவாவடுதுறை ஆதீனம் 24 -ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் பங்கேற்று பூஜைகள் செய்து தொடங்கிவைக்கவுள்ளார். தொடக்க நாள் முதல் நிறைவு வரை பல்வேறு தலைப்புகளில் ஆன்மிக சொற்பொழிவு, பக்திப் பாடல்கள், திருமுறை இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
பொதுமக்கள் மாலை நேரத்தில் கொலு தர்பார் காட்சியைப் பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.