காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, உத்ஸவர் நித்யகல்யாணப் பெருமாள், நர்த்தன கண்ணன், குழந்தை வடிவிலான கண்ணனுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற சிறப்பு திருமஞ்சனத்தையொட்டி, பெருமாள் மற்றும் கண்ணனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. குழந்தை வடிவிலான கண்ணனை, பக்தர்கள் அருகில் சென்று தொட்டு வழிபட்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கைலாசநாதர் கோயில், நித்யகல்யாணப் பெருமாள் அறங்காவல் குழுவினர், நித்யகல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினர் ஆகியோர் செய்திருந்தனர். இதுபோன்று நிரவி கரியமாணிக்கப் பெருமாள் கோயில், திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், வீழிவரதராஜப் பெருமாள் கோயிலிலும் கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், குழந்தை வடிவிலான கண்ணன் வழிபாடு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவின் விரோதி... அரவிந்த் கேஜரிவால் குறித்து மு.க. ஸ்டாலின்!

நியூசிலாந்தை வீழ்த்திய வங்கதேசம்; சமனில் ஒருநாள் தொடர்!

என் ஆட்சியை மு.க. ஸ்டாலின் பார்ப்பார் : எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் பிரசாரம்!

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்; பிளேயிங் லெவனில் இரண்டு அறிமுக வீரர்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

