வேளாண் தொழில்நுட்பத்தை புரிந்துகொண்டு விவசாயம் செய்தால் நல்ல லாபம் ஈட்ட முடியும் எனவும், விவசாயத்தில் ரசாயன உர பயன்பாட்டை வெகுவாக குறைக்க விவசாயிகள் முயற்சிக்கவேண்டும் எனவும் வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் அறிவுறுத்தினார்.
பிரதமரின் கிசான் சம்மன் நிதி என்கிற 2 ஹெக்டேருக்கு மிகாமல் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதியுதவி செய்யும் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில், பிரதமரின் இந்த காணொலி நிகழ்ச்சி காரைக்கால் வேளாண் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 200 விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இதில், கலந்துகொண்ட புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் பேசியது : கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளுக்கு முன்னேற்றமான காலமாக இருந்தது. இப்போது, அந்த நிலை மாறியதையடுத்து விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேரணி உள்ளிட்ட போராட்டங்களை ஆங்காங்கே நடத்துகின்றனர்.
தேர்தல் காலம் என்பதால் ஏதேனும் மக்களுக்கு செய்யவேண்டும் என்ற நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதுஆளும் கட்சிக்கு மட்டுமல்ல, எல்லா கட்சிகளும் இதே நிலைப்பாட்டை கொண்டிருக்கும்.
விவசாயிகளின் வருவாயை பெருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்துகிறது. விவசாயிகளுக்கு புதுச்சேரியில் நேரடியாகவும், மறைமுக நிலையிலும் உதவக்கூடிய திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. தற்போது, மத்திய அரசு, விவசாயிகளுக்கு நேரடி உதவியாக ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துகிறது. இதுபோன்ற மத்திய, மாநில அரசுகளின் உதவியால் விவசாயிகளிடையே விவசாயத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்ய முடிகிறது.
விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் மீது விவசாயிகள் கவனம் செலுத்தவேண்டும். அரசு வழங்கும் ஆலோசனைகளின்படி நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் வேளாண் துறையானது தெளிவான ஆலோசனைகளை தரும்போது அதை பயன்படுத்தவேண்டும். ஆனால் பலர் இதை பொருட்படுத்துவதில்லை. ஒரு ஏக்கருக்கு 45 மூட்டை நெல் மகசூல் கிடைத்தால் லாபம். ஆனால், தற்போது 30-க்குள்ளான அளவில் கிடைக்கிறது. இதை உயர்த்த விவசாயிகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முன்வரவேண்டும்.
புதுச்சேரியில் பலர் பசுந்தாள் உரம் பயன்படுத்துகின்றனர். காரைக்காலில் அவ்வாறான நிலை மிக குறைவாக உள்ளது. ரசாயன உரத்தை தொடர்ந்து பயன்படுத்தினால் மண் தரம் வெகுவாக குறையும். இதை நடைமுறையிலேயே நாம் கவனிக்க முடியும்.
இதில் பயிர் செய்தால் அதன் மகசூலிலும், தரத்திலும் வெகுவாக பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இயற்கை முறையிலான உரங்கள், பூச்சுக் கொல்லிகளை முழுமையாக பயன்படுத்தவேண்டும். அங்கக-ரசாயன உரம் கலந்து பயன்படுத்தவும் முயற்சிக்கலாம்.
அரசு வழங்கும் ஆலோசனைகள், உதவிகளை, அவ்வப்போதைய புதிய தொழில்நுட்பங்கள், ரசாயனத்தை குறைப்பது போன்ற முயற்சிகளில் விவசாயிகள் ஈடுபட்டால், தற்போதைய லாபத்தை இரட்டிப்பாக்க நிச்சயமாக முடியும். இதை வேளாண் அமைச்சர் என்ற முறையில் கூறவில்லை, சுமார் 40 ஆண்டு கால விவசாயி என்ற முறையில் கூறுகிறேன் என்றார் அமைச்சர்
ஆர். கமலக்கண்ணன்.
நிகழ்ச்சியில், மாவட்ட துணை ஆட்சியர் எஸ்.பாஸ்கரன், வேளாண் கல்லூரி முதல்வர் கந்தசாமி, கூடுதல் வேளாண் இயக்குநர் க.மதியழகன் உள்ளிட்டோர் பேசினர். காரைக்கால் மாவட்டத்தில் நிதியுதவி பெறும் திட்டத்தில் முதல் கட்டமாக 803 விவசாயிகள் பயனடைவதாக விவசாயத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜூன் 3-இல் கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட புதுச்சேரி திமுக முடிவு
தந்தையை தாக்கிய மகன் கைது

பவானி, அந்தியூா் வட்டாரங்களில் பலத்த காற்றுடன் கனமழை

கட்சி மாறியவா்கள் தோ்தலில் மீண்டும் போட்டியிட்டால் மக்கள் பாடம் புகட்டுவாா்கள்: புவனகிரி அதிமுக எம்எல்ஏ
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


