நிரவி அருகே உள்ள ஐ.ஓ.சி. பெட்ரோல் பங்க்கில் நவீன முறையில் வாகனங்களுக்கு ஆயில் மாற்றும் பிரிவு தொடங்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், நிரவி ஓ.என்.ஜி.சி. பேருந்து நிறுத்தம் அருகே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் டீலரான சாரதி ஏஜென்சீஸ் பெட்ரோல் பங்க்கில், சர்வோ எக்ஸ்பிரஸ் மூலம் நவீன முறையில் வாகனங்களுக்கு ஆயில் மாற்றி தரும் பிரிவு செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
பங்க் டீலர் பா. குணசீலன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் நிறுவன துணைப் பொதுமேலாளர் ஏ.எம்.சந்தோஷ்குமார், உயர்நிலை விற்பனை அதிகாரி சிவமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பிரிவைத் திறந்துவைத்தனர்.
நிகழ்ச்சியில், சர்வோ டி.ஆர்.வி.4 கிராஃப்ட் ஆயில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மையம் திறப்பு குறித்து பா. குணசீலன் கூறும்போது, சர்வோ சார்பில் பங்கில் 5 நிமிடத்தில் வாகனங்களுக்கு ஆயில் மாற்றி தரும் வகையில் இயந்திரத்துடன் தனிப் பிரிவு அமைத்து தரப்பட்டது. வாகனங்களில் உள்ள எண்ணெய் 3 நிமிடத்தில் பம்ப் செய்து வெளியேற்றப்பட்டு புதிதாக எண்ணெய் நிரப்பப்படும்.
இந்த வசதி வாகனதாரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடல் எடையை குறைக்க உதவும் உப்பு? ஆய்வு சொல்வது என்ன? அறிவியல் ஆயிரம்!

மாரி செல்வராஜ் புதிய பட அப்டேட்!
ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தாக்குதல்!

ஆர்சிபி வெற்றிக்காக யாக சாலை பூஜை நடத்திய ரசிகர்கள்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


