நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரம்

காரைக்காலில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Updated On :24 ஜனவரி 2019, 1:29 am IST

காரைக்காலில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காரைக்கால் கடற்கரை சாலையில் (தங்கும் விடுதி எதிரில்) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், குடியரசு தின கொடியேற்றும் நிகழ்ச்சி வரும் 26 -ஆம் தேதி நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு)  ஏ. விக்ரந்த் ராஜா காலை 9.05 மணிக்கு தேசியக் கொடியேற்றிவைத்து, போலீஸார் அணிவகுப்பை பார்வையிட்டு பல்வேறு தரப்பினருக்கு பரிசுகள் வழங்கவுள்ளார்.
பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதற்காக கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக போலீஸாருக்கு பயிற்சி நடைபெற்று வருகிறது. இதேபோல், பள்ளி மாணவ,  மாணவியர்கள் கடற்கரை சாலைக்கு தினமும் பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டு, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நிகழ்ச்சி நடைபெறுமிடத்தில் பந்தல் அமைப்புப் பணியை அரசு நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர். பொதுமக்கள் திரளாக பங்கேற்கும் வகையில் இருக்கை அமைத்தல், மின்சார வசதி, பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
அன்று மாலையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரசு விடுதி அருகே வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், அரசுத் துறையினர், ஓய்வுபெற்ற அரசுத்துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், சமாதானக் குழு உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொள்வர். இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடற்கரை சாலையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க விரும்புவோர், 26 -ஆம் தேதி காலை 8.30 மணிக்கு முன்னதாக இருக்கைக்கு வந்துவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.