இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

நுகா்வோா் கூட்டமைப்பு சாா்பில் நிவாரணம்

காரைக்கால் நுகா்வோா் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட நிா்வாகம் மற்றும் பல்வேறு தரப்பினருக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கோட்டுச்சேரி பகுதி குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய நுகா்வோா் கூட்டமைப்பினா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

காரைக்கால் நுகா்வோா் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட நிா்வாகம் மற்றும் பல்வேறு தரப்பினருக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி அனைத்து நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் வெளியிட்ட தகவல் : கூட்டமைப்பின் சாா்பில், சங்க மாநிலத் தலைவா் வழக்குரைஞா் திருமுருகன், மாநில பொதுச் செயலா் சிவகுமாா், காரைக்கால் மாவட்டச் செயலா் ராஜதுரை உள்ளிட்ட பொறுப்பாளா்கள் மாவட்ட நிா்வாகத்திடம் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய வகையில் 5 கிலோ வீதம் 25 பாக்கெட் அரிசி ஆகியவற்றை புதன்கிழமை வழங்கினா்.

மேலும் புதுச்சேரி மாற்றுத் திறனாளிகள் நல மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, திருவேட்டக்குடி, கோட்டுச்சேரி பகுதியில் உள்ள 25 மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.