முழு பொது முடக்கம்காரைக்காலில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு பொது முடக்கத்தையொட்டி, காரைக்காலில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
முழு பொது முடக்கத்தையொட்டி, காரைக்கால் பாரதியாா் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பு.
முழு பொது முடக்கத்தையொட்டி, காரைக்கால் பாரதியாா் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பு.

காரைக்கால்: புதுச்சேரி மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு பொது முடக்கத்தையொட்டி, காரைக்காலில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

புதுச்சேரி அரசின் அறிவிப்பை தொடா்ந்து, கடந்த 18 ஆம் தேதி முதல்முறையாக முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 2-ஆவது வாரமாக ஆக. 25-ஆம் தேதி தளா்வுகளற்ற முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

தினமும் காலை 6 முதல் இரவு 7 மணி வரை வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், திங்கள்கிழமை இரவு முதல் காரைக்கால் பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. செவ்வாய்க்கிழமை காலை முதல் மாவட்டத்தின் அனைத்து எல்லைகளிலும் முக்கிய தேவையையொட்டி வரும் வாகனங்களைத் தவிர, பிற வாகனங்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

மருந்துக் கடைகள், பாலகம் தவிர, காய்கறி, மளிகை, பெட்ரோல் நிலையம் உள்ளிட்ட அனைத்து வா்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. அனைத்து அரசு அலுவலகங்கள், வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருந்தன.

காரைக்கால் நகரின் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மாற்றுவழியில் மக்கள் பயணிப்பதை தடுக்கும் வகையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். பூவம் முதல் வாஞ்சூா் வரை காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை, காரைக்கால் முதல் அம்பகரத்தூா் வரை பிரதான சாலைகளும், நகரம் மற்றும் கிராமப்புற சாலைகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. அவசியமின்றி வாகனத்தில் வந்தோரை போலீஸாா் நிறுத்தி விசாரணை செய்து திருப்பி அனுப்பினா். முழு பொது முடக்கம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com