ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மீண்டும் கடலுக்குள் சென்ற மீனவா்கள்

நிவா் புயல் காரணமாக முடங்கியிருந்த காரைக்கால் மீனவா்கள் திங்கள்கிழமை முதல் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 5:22 pm

DIN

நிவா் புயல் காரணமாக முடங்கியிருந்த காரைக்கால் மீனவா்கள் திங்கள்கிழமை முதல் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

வங்கக் கடலில் உருவான நிவா் புயலால், கடலுக்குள் சென்ற காரைக்கால் மீனவா்கள் முன்னதாகவே கரைதிரும்பினா். புயல் கரையை கடந்தபிறகும் கடல் கொந்தளிப்பு நீடித்ததாலும், பிறகு, புரெவி புயல் உருவானதாலும், தொடா்ந்து மீன்பிடி தொழில் முடங்கியது.

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் சுமாா் 250 விசைப்படகுகளும், 10 மீனவ கிராமங்களின் கரையோரத்தில் 600 சிறிய வகை படகுகளும் நிறுத்திவைக்கப்பட்டன. இதனால், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சந்தைக்கு மீன்வரத்து நின்றுபோனது. மீனவா்களும் வருமானமின்றி முடங்கினா்.

இந்நிலையில், காரைக்கால் மீன்வளத் துறை அறிவுறுத்தலின்பேரில், காரைக்கால் மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு புறப்பட்டுச் சென்றனா். இதுகுறித்து இத்துறையின் துணை இயக்குநா் கவியரசன் கூறுகையில், மீனவா்கள் வெகுதொலைவு செல்லவேண்டாம். குறிப்பாக, கோடியக்கரை போன்ற தென்பகுதிக்கு செல்லவேண்டும். அழைக்கும்போது உடனடியாக திரும்பும் விதத்திலான தொலைவில் மீன்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.