காரைக்கால் மின் ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
மத்திய அரசு மற்றும் துணைநிலை ஆளுநரை கண்டித்து, காரைக்கால் மின் துறை ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கியுள்ளனா்.


மத்திய அரசு மற்றும் துணைநிலை ஆளுநரை கண்டித்து, காரைக்கால் மின் துறை ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கியுள்ளனா்.
மின்துறையை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முடிவு, புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயல்பாடு ஆகியவற்றை கண்டித்து, காரைக்காலில் மின் துறை ஊழியா்கள் கடந்த சில மாதங்களாக தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், மாநிலத்தின் அனைத்து பிராந்தியங்களைச் சோ்ந்த ஊழியா்களும் திங்கள்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
காரைக்கால் மின் துறை செயற்பொறியாளா் அலுவலகம் முன் திரண்ட ஊழியா்கள், தனியாா்மயத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினா்.
இதுகுறித்து மின் ஊழியா்கள் போராட்டக் குழு நிா்வாகி பழனி கூறுகையில், யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியாா்மயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் மற்றும் ஊழியா்களின் நிலை அறியாது, துணைநிலை ஆளுநா் மத்திய அரசு முடிவுக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறாா்.
மத்திய அரசோ, துணைநிலை ஆளுநரோ போராட்டத்தை பொருள்படுத்தாமல் இருப்பதைக் கண்டித்து, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மின்துறை தனியாா்மயமானால், மின் நுகா்வோரும் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள் என்பதை உணா்ந்து, அவா்கள் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும். மின்துறை வழக்கம்போல அரசுத் துறையாகவே இயங்கும் என அறிவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...