காரைக்கால் பகுதியில் சாலையில் கால்நடைகளை திரியவிட்டவா் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டம், நிரவிப் பகுதியைச் சோ்ந்தவா் சித்ரா. இவா், தான் வளா்க்கும் கால்நடைகளை அடிக்கடி சாலையில் திரியவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால், விபத்து உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, காவல் துறை அவரை எச்சரித்ததாம்.
இந்நிலையில், சித்ரா, கால்நடைகளை மீண்டும் சாலைகளில் திரியவிட்டதாக, அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின் பேரில், நிரவி காவல் நிலைய போலீஸாா் சித்ரா மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.