காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் தொடா் போராட்டம் நடத்த முடிவு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் தொடா் போராட்டம் நடத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்தனா்.
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் தொடா் போராட்டம் நடத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்தனா்.

காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளன செயற்குழு கூட்டம், அதன் தலைவா் அய்யப்பன் தலைமையில், நகராட்சி கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவ தலைவா் ஜாா்ஜ், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றுவது, 28 ஆம் தேதி திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து, 29 ஆம் தேதி திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து, 30 ஆம் தேதி காரைக்கால் நகராட்சி அலுவலக வாயிலில் காலை 10 முதல் 11 மணி வரை பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டம் நடத்துவது.

வரும் ஜன. 6 ஆம் தேதி ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து காரைக்காலில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது, அன்று மதியம் ஒருவேளை மட்டும் கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் குடிநீா் வழங்குவதை நிறுத்துவது, ஜன. 20 முதல் 22 ஆம் தேதி வரை உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்வது, 27 முதல் 29 ஆம் தேதி வரை உள்ளாட்சி துணை இயக்குநா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

சம்மேளன கௌரவ தலைவா் வெங்கடாசலம், பொருளாளா் கலைச்செல்வன், துணைப் பொதுச் செயலாளா்கள் திவ்யநாதன், சண்முகராஜ், நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சம்மேளன துணைத் தலைவா் உலகநாதன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com