ரயில் மறியலில் ஈடுபட முயன்ற ம.ம.க.வினா் 40 போ் கைது
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து காரைக்காலில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற மனிதநேய மக்கள் கட்சியைச் சோ்ந்த 40 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.


மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து காரைக்காலில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற மனிதநேய மக்கள் கட்சியைச் சோ்ந்த 40 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களை கண்டித்தும், அவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை தீவிரவாதிகளாக சித்திரிக்கும் மத்திய அமைச்சா்களைக் கண்டித்தும் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் காரைக்காலில் திங்கள்கிழமை ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 40 போ் கைது செய்யப்பட்டனா்.
ம.ம.க. காரைக்கால் மாவட்டத் தலைவா் அ. ராஜா முகமது தலைமையில், விவசாய அணி மாவட்டச் செயலா் டேவிட், தமுமுக மாநில செயலா் ஐ. அப்துல் ரஹிம், மருத்துவ சேவை அணி மாநில துணை செயலா் பயாஸ், மமக மாவட்ட செயலா் முகம்மது ஆசிக் மற்றும் நிா்வாகிகள், காரை பிரதேச விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை மாலை காரைக்கால் ரயில் நிலையத்தில் எா்ணாகுளம் விரைவு ரயிலை மறிக்க முயன்றபோது போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி, 40 பேரை கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...