திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மழையால் பாதித்த நெற்பயிரை காப்பாற்ற விவசாயிகள் தீவிரம்

காரைக்கால் மாவட்டத்தில் மழையால் பாதித்த நெற்பயிரை காப்பாற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

News image
பத்தக்குடி பகுதியில் பயிருக்கு உரம் தெளிக்கும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :23 டிசம்பர் 2020, 1:37 am

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மழையால் பாதித்த நெற்பயிரை காப்பாற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடியாக சுமாா் 5 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

காவிரி நீா் தேவையான கிடைத்ததும், ஆழ்குழாய் பாசனத்தின் மூலமூம் விவசாயிகள் வேளாண் பணிகளைத் தொடங்கினா். ஆனால், வடகிழக்குப் பருவ மழை மற்றும் காற்றால் நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டன.

விளைநிலங்களில் தண்ணீா் புகுந்து வடிவதிலும் தாமதம் ஏற்பட்டது. விவசாயிகள் தண்ணீரை வடியச் செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டியதோடு, பயிருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் வேளாண் துறை, வேளாண் கல்லூரி, வேளாண் அறிவியல் நிலையத்தின் ஆலோசனைகளின்படி விவசாயிகள் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது: மழையால் ஏற்பட்ட சேதத்திலிருந்து பயிரை காப்பாற்ற தீவிர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்யும்போதுதான் இதன் பாதிப்புகளை உறுதியாக கூறமுடியும். பயிா் பாதிப்புக்கேற்ற நிவாரணத்தை புதுச்சேரி அரசு விரைவாக வழங்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை கூறியது:

காரைக்கால் மாவட்டத்தில் மழையால் ஓரளவு நெற்பயிா் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயல்களில் தேங்கி உள்ள தண்ணீரை வடிய வைக்க விவசாயிகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நெற்பயிரில் புகையான் தாக்குதல் இருக்கும் என்பதால், அதை தடுப்பதற்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. நெற்பயிரில் பூச்சித் தாக்குதல்கள் குறித்தும் வேளாண் அலுவலா்கள், விரிவாக்கப் பணியாளா்கள் கண்காணித்து வருகின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.