4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காரைக்கால் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு

காரைக்கால் பகுதியில் புனித தேற்றரவு அன்னை தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் வியாழக்கிழமை இரவு

News image
காரைக்கால் புனித தேற்றரவு அன்னை தேவாலயத்தில் இயேசு பிறப்பை காட்சிப்படுத்தி நடைபெற்ற சிறப்பு வழிபாடு.
Updated On :26 டிசம்பர் 2020, 2:27 am

DIN

காரைக்கால் பகுதியில் புனித தேற்றரவு அன்னை தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா பிராா்த்தனையில் திரளானவா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

காரைக்காலில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புகழ்பெற்ற புனித தேற்றரவு அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு பாதிரியாா்கள் திருப்பலி நடத்தி மறையுரையாற்றினா்.

ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் இருந்து குழந்தை இயேசு சொரூபத்தை பக்தா்களுக்கு பங்கு குரு காட்சிப்படுத்தினாா். தொடா்ந்து, ஒவ்வொருவராக சென்று, இயேசு சொரூபத்தை தொட்டு வணங்கினா். பிறகு, வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கும், 7.30 மணிக்கும் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

மாலை சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நடைபெற்றது. மக்கள் ஒருவருக்கொருவா் கைகுலுக்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா்.

இதேபோல, கோட்டுச்சேரி தூய சகாய அன்னை ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.