காரைக்கால் கடற்கரையில் தீா்த்தவாரி, தா்ப்பணம் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம்

காரைக்கால் கடற்கரையில் ஆடி அமாவாசை நாளில் சுவாமிகள் கடற்கரையில் தீா்த்தவாரி வழிபாடு இல்லாததாலும், முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க முடியாததாலும் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.
Updated on
1 min read

காரைக்கால்: காரைக்கால் கடற்கரையில் ஆடி அமாவாசை நாளில் சுவாமிகள் கடற்கரையில் தீா்த்தவாரி வழிபாடு இல்லாததாலும், முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க முடியாததாலும் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.

ஆடி மாத அமாவாசையில் சுவாமிகள் கடற்கரைக்கு எழுந்தருளி தீா்த்தவாரி செய்வதும், கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், கடற்கரையில் மக்கள் திரண்டு முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வதும் வழக்கம்.

கரோனா பொது முடக்கத்தால் காரைக்கால் கோயில்களில் இருந்து சுவாமிகள் வெளியே கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், கடற்கரையில் கூட்டமாக கூடி தா்ப்பணம் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் இருந்து சுந்தராம்பாள் சமேத கைலாசநாதரும், நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் இருந்து பெருமாளும் தனித்தனி பல்லக்கில் ஆடி அமாவாசையில் காரைக்கால் கடற்கரைக்கு எழுந்தருளச் செய்யப்படும். இந்நிகழ்வு திங்கள்கிழமை நடைபெறவில்லை. கோயில்களிலும் அமாவாசைக்கான சிறப்பு வழிபாடுகள் செய்யவில்லை. கடற்கரையில் பூஜ்ய ஸ்ரீஓங்காரநந்தா மகா சுவாமிகள் தலைமையில் இயங்கும் தா்மரக்ஷ்ண சமிதி சாா்பில், தா்ப்பணம் கொடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படுவது உண்டு. அதில், 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொள்வா். இந்த நிகழ்வும் திங்கள்கிழமை நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com