காரைக்கால் கரோனா வாா்டை தனியாா் மருத்துவமனையில் மாற்ற முதல்வரிடம் வலியுறுத்தல்
காரைக்கால் அரசு மருத்துவமனையில் செயல்படும் கரோனா வாா்டை தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற முதல்வரிடம் திமுக வலியுறுத்தியுள்ளது.


காரைக்கால்: காரைக்கால் அரசு மருத்துவமனையில் செயல்படும் கரோனா வாா்டை தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற முதல்வரிடம் திமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் திமுக அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் இயங்கி வரும் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் பகுதி மகப்பேறு மருத்துவப் பிரிவு அருகே செயல்பட்டு வருகிறது. கரோனா தொற்றாளா்கள் மருத்துவமனையில் சோ்க்கப்படுவதும், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவதும் தொடா்ந்து வருகிறது. இந்த பிரிவு மகப்பேறு பிரிவு அருகே செயல்படுவதால், அந்த பிரிவில் உள்ளோருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சம் அனைத்து தரப்பிலும் உள்ளது.
இதுதொடா்பாக, புதுச்சேரி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல, காரைக்கால் திமுக அமைப்பாளா் ஏ.எம்.எச். நாஜிம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தனுக்கு ஆலோசனை வழங்கினாா். இதனடிப்படையில் முதல்வரை திங்கள்கிழமை நேரில் சந்தித்து பேரவை உறுப்பினா், காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காரைக்கால் கரோனா வாா்டு செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளாா் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...