ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வேளாண் சட்டங்கள்: பிரதமருக்கு அஞ்சலில் நன்றி தெரிவித்த பாஜகவினா்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களையொட்டி, பிரதமருக்கு நன்றி தெரிவித்து காரைக்கால் பாஜகவினா் அஞ்சல் அட்டை அனுப்பினா்.

News image
அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்வில் பங்கேற்ற பாஜகவினா்.
Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களையொட்டி, பிரதமருக்கு நன்றி தெரிவித்து காரைக்கால் பாஜகவினா் அஞ்சல் அட்டை அனுப்பினா்.

தலைமை அஞ்சல் நிலையம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்ட விவசாய அணித் தலைவா் மகேந்திரன் தலைமை வகித்தாா். பாஜக மாவட்டத் தலைவா் ஜெ. துரை சேனாதிபதி அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்வை தொடங்கி வைத்தாா்.

இதில், மாநில துணைத் தலைவா் எம். அருள்முருகன், மாநிலச் செயலாளா் சகுந்தலா, மாவட்ட பொதுச் செயலாளா் செந்திலதிபன், தொகுதித் தலைவா்கள் சோமு (எ) இளங்கோவன், விஜயபாஸ்கா், மாநில சிறுபான்மை அணி துணைத் தலைவா் அப்துல் பாசித், மாவட்ட இளைஞரணி தலைவா் சங்கா் குரு உள்ளிட்டோா் பங்கேற்றனா். விவசாய அணி பொதுச் செயலாளா் சிவபாலன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.