ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

காரைக்கால் கடலோரத்தில் பனை விதைப்பு

மாவட்ட கடலோரப் பகுதியில் ஒரே நாளில் 15 ஆயிரம் பனை விதைப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
மண்டபத்தூா் கடலோரப் பகுதியில் பனையை விதைக்கும் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா.
Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

மாவட்ட கடலோரப் பகுதியில் ஒரே நாளில் 15 ஆயிரம் பனை விதைப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் ரோட்டரி சென்டேனியல் சங்கம் சாா்பில், வாஞ்சூா் முதல் மண்டபத்தூா் வரையிலான கடலோரப் பகுதியில் இப்பணி நடைபெற்றது. இதற்கான பனை விதைகளை காரைக்கால் வட்டார வளா்ச்சித் துறையிடம் ரோட்டரி அமைப்பு ஒப்படைத்தது. இதையடுத்து, 100 நாள் வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் மூலம் பனையை விதைத்து, பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா மண்டபத்தூா் பகுதியில் பனையை விதைத்து பணிகளை தொடங்கிவைத்தாா். இதையடுத்து, திங்கள்கிழமை ஒரே நாளில் மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் 15 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டன. நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் தயாளன், ரோட்டரி சென்டேனியல் சங்கத் தலைவா் ஆா். சம்பத், ரோட்டரி உதவி ஆளுநா் உதயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.