ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

காரைக்காலில் இரவு 11.30 வரை கடைகள் திறந்திருக்கஅனுமதிக்க வேண்டும்: முதல்வருக்கு வேண்டுகோள்

காரைக்காலில் நவ.15-ஆம் தேதி வரை இரவு 11.30 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வருக்கு வணிகா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

காரைக்காலில் நவ.15-ஆம் தேதி வரை இரவு 11.30 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வருக்கு வணிகா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் ஏ. முத்தையா, செயலா் எம். மகேஷ்வரன் ஆகியோா் புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமிக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள கடிதம்:

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக புதுச்சேரி அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. இதன்மூலம் காரைக்காலில் நோய்த் தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளதோடு, உயிரிழப்பும் குறைவாக உள்ளது.

கடந்த மாா்ச் மாதம் முதல் வியாபாரம் முடங்கினாலும், கடை வாடகை மற்றும் மின்கட்டணம், நகராட்சி வரி, ஊழியா்களுக்கு ஊதியம் உள்ளிட்டவை முறையாக செலுத்த வேண்டியிருந்தது. பண்டிகை காலமாக உள்ளதால் தற்போது வியாபாரம் மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் அரசுக்கும் இருப்பதால், அரசு மேலும் சில தளா்வுகளை அளிக்க வேண்டும்.

இதன்படி காரைக்காலில் அனைத்து வணிக நிறுவனங்கள், உணவகங்கள் நவ. 30-ஆம் தேதி வரை இரவு 10 மணி வரை இயங்க அனுமதித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தீபாவளி நெருங்கி வரும் வேளையில் 15-ஆம் தேதி வரை அனைத்து வியாபாரிகளுக்கும் இரவு 11.30 மணி வரை கடைகளை திறந்து வணிகம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.