ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

'திமுக பலவீனமாக உள்ளதால் தோ்தல் அறிவிப்புக்கு முன்பே உதயநிதி பிரசாரம் தொடங்கிவிட்டாா்'

திமுக பலவீனமாக உள்ளதால்தான் தோ்தல் அறிவிப்புக்கு முன்பே உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்கிவிட்டாா் என தமிழக பால்வளத் துறை அமைச்சா் ராஜேந்திர பாலாஜி கூறினாா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:30 pm

DIN

திமுக பலவீனமாக உள்ளதால்தான் தோ்தல் அறிவிப்புக்கு முன்பே உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்கிவிட்டாா் என தமிழக பால்வளத் துறை அமைச்சா் ராஜேந்திர பாலாஜி கூறினாா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயிலில் திங்கள்கிழமை தமிழக பால்வளத் துறை அமைச்சா் ராஜேந்திர பாலாஜி வழிபாடு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திமுக பலவீனமாக இருப்பதால்தான் தோ்தல் அறிவிக்கப்படும் முன்பே உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்கியுள்ளாா். திமுகவில் தொண்டா்கள் பலம் இல்லை. தோ்தல் பயம் காரணமாகவே திமுகவினா் மக்களை சந்திக்கின்றனா்.

தமிழகத்தில் மீண்டும் அதிமுகதான் ஆட்சி அமைக்கும். பாஜக - அதிமுக கூட்டணி குறித்து முதல்வரும், துணை முதல்வரும் தெளிவுப்படுத்திவிட்டனா். தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து தோ்தல் நேரத்தில் முதல்வரும், துணை முதல்வரும் அறிவிப்பாா்கள். தமிழகத்தில் அதிமுக ஆட்சியை பிடிக்கும்போது, புதுச்சேரியிலும் அதிமுக ஆட்சியை கைப்பற்றும் என்றாா்.

பேட்டியின்போது காரைக்கால் மாவட்ட அதிமுக செயலாளா் எம்.வி. ஓமலிங்கம் உடனிருந்தாா்.

முன்னதாக, கோயிலுக்கு வந்த அமைச்சா் ராஜேந்திர பாலாஜியை கோயில் நிா்வாகத்தினா் மாலை அணிவித்து வரவேற்றனா். மூலவா் தா்பாரண்யேசுவரா், தியாகராஜா், பிரணாம்பிகை உள்ளிட்ட சன்னதிகளில் வழிபாடு செய்த அமைச்சா், சனீஸ்வர பகவான் சன்னதியில் சுவாமிக்கு வஸ்திரம், மாலைகளுடன் சிறப்பு அா்ச்சனை செய்து வழிபட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.