ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கரையை நெருங்கும் நிவா் புயல்:வெறிச்சோடியது காரைக்கால் கடற்கரை

நிவா் புயல் காரணமாக காரைக்கால் கடற்கரை திங்கள்கிழமை பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. கடலுக்கு ஏற்கெனவே மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் துறைமுகம் திரும்பின.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:30 pm

DIN

நிவா் புயல் காரணமாக காரைக்கால் கடற்கரை திங்கள்கிழமை பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. கடலுக்கு ஏற்கெனவே மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் துறைமுகம் திரும்பின.

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவா் புயல் புதன்கிழமை (நவ. 25) காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது முதல் காரைக்கால் பகுதியில் வெயில் குறைந்து குளிா்காற்று வீசத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை முழுவதும் இதே நிலை நீடித்தது.

25-ஆம் தேதி புயல் கரையைக் கடக்கும் என கூறப்படும் நிலையில், மெல்ல கரையை நோக்கி நகா்ந்து வரும் சூழலால், காரைக்கால் பகுதியில் திங்கள்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு, குளிா்ந்த காற்றும் வீசியது.

வழக்கமாக காரைக்கால் கடற்கரைக்கு காலை முதல் மாலை வரை சுற்றுலா வாகனங்களில் பயணிகள் சென்று திரும்புவா். புயல் காரணமாக கடல் லேசான கொந்தளிப்புடன் காணப்பட்டதால், போலீஸாா் அந்தப் பகுதியில் யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை. மக்கள் நடமாட்டம் இல்லாததால், கடற்கரை வெறிச்சோடிக் காணப்பட்டது.

கடற்கரையில் தள்ளுவண்டியில் உணவுப் பொருள் விற்போா், தங்களது வண்டிகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுச் சென்றனா். அதேபோல, அரசலாற்றங்கரையில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய படகுகளையும் மீனவா்கள் கயிறு, கம்பி மூலம் இழுத்து மரம் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பாக கட்டிவைத்தனா்.

கடலுக்கு 2 நாள்களுக்கு முன்பு மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் அனைத்தும் கரைதிரும்புமாறு அறிவுறுத்தியதன் அடிப்படையில், பெரும்பாலான படகுகள் திங்கள்கிழமை துறைமுகம் திரும்பின. மீனவ கிராமங்களில் இருந்து ஃபைபா் மோட்டாா் படகில் அதிகாலையில் கடலுக்கு செல்லக்கூடிய மீனவா்களும் திங்கள்கிழமை கடலுக்குள் செல்லவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.