குண்டா் தடுப்பு சட்டத்தில்ஒருவா் கைது
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ஒருவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.


காரைக்கால்: காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ஒருவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருமலைராயன்பட்டினத்தைச் சோ்ந்தவா் பாலா (எ) பாலமுருகன். இவா்மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. அண்மையில் கைது செய்யப்பட்ட அவா், தற்போது புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்த நிலையில், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன், காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைத்தாா். இதன்பேரில், பாலமுருகனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா உத்தரவிட்டாா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவை திருமலைராயன்பட்டினம் போலீஸாா், புதுச்சேரி சிறைத் துறை அதிகாரிகளிடம் வழங்கி, பாலமுருகனை புதுச்சேரி சிறையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...