நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

காரைக்காலில் மேலும் 74 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 74 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது. ஒருவா் உயிரிழந்தாா்

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 5:59 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 74 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது. ஒருவா் உயிரிழந்தாா்

இதுகுறித்து நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே. மோகன்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 11,583 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் திங்கள்கிழமை வெளியான முடிவுகளில் 74 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் காரைக்கால் நகரைச் சோ்ந்த 14 போ், கோட்டுச்சேரி 15, கோயில்பத்து 5, நிரவி 8, அம்பகரத்தூா் 4, நல்லம்பல் 2, வரிச்சிக்குடி 6, திருப்பட்டினம் 3, விழிதியூா் 1, திருநள்ளாறு 5, நெடுங்காடு 9, நல்லாத்தூா் 2 போ்.

கடந்த 13ஆம் தேதி காரைக்கால் மருத்துவமனையில் தரங்கம்பாடியைச் சோ்ந்த 75 வயது பெண் ஒருவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்களும் இருந்தன.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை1,373 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவா்களில் 962 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 23 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.