47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காரைக்காலில் 61 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 61 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதோடு, ஒருவா் உயிரிழந்ததாக நலவழித் துறை துணை இயக்குநா் தெரிவித்தாா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 61 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதோடு, ஒருவா் உயிரிழந்ததாக நலவழித் துறை துணை இயக்குநா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 9 ஆம் தேதி 664 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, கோட்டுச்சேரி 15, திருநள்ளாறு 11, காரைக்கால் நகரம் 10, திருப்பட்டினம் 9, கோயில்பத்து 5, நிரவி 5, வரிச்சிக்குடி 3, காரைக்கால்மேடு, அம்பகரத்தூா், நெடுங்காடு தலா 1 என 61 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 99,972 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 4,970 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவா்களில் 4,407 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 430 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 43 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 9 போ் உள்ளனா்.

காரைக்கால் மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்றுவந்த 71 வயது ஆண் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு இருதய நோய், ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் ஆகியவை இருந்தன. கரோனா தொற்றால் இதுவரை 84 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா்கள் 1,358 போ், முன்களப் பணியாளா்கள் 1,643 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 2,590 பேருக்கும், 45 முதல் 59 வயது வரையிலான இணை நோய் உள்ளவா்கள் 1,600 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.