47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காரைக்காலில் கஜா புயலின்போது தரைதட்டிய கப்பலை அப்புறப்படுத்தும் பணி தொடக்கம்

காரைக்கால் அருகே கஜா புயலின்போது கரைஒதுங்கிய கப்பலை உடைத்து அப்புறப்படுத்தும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் அருகே கஜா புயலின்போது கரைஒதுங்கிய கப்பலை உடைத்து அப்புறப்படுத்தும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

காரைக்கால் துறைமுகத்தில் சரக்குகளை இறக்க வரும் கப்பலுக்காக, கப்பல் வரும் பகுதியில் மணல் தூா்வாரும் பணியில் மொ்கேடா் என்ற நிறுவனத்தைச் சோ்ந்த டிரெட்ஜா் கப்பல் பயன்படுத்தப்படுகிறது. இந்த கப்பல் கடந்த 2018, நவம்பா் மாதம் வீசிய கஜா புயலின்போது துறைமுகத்தில் இருந்து சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவில் தரைதட்டி நின்றது.

அப்போது, இதிலிருந்த பணியாளா்கள் 25 போ் பத்திரமாக கரையேறினா். புயலுக்குப் பிறகு கப்பலை மீட்க நடைபெற்ற முயற்சியின்போது, கப்பலின் அடிபாகத்தில் ஏற்பட்ட பாதிப்பால் தண்ணீா் உள்ளே புகுந்ததால், கப்பலை மீட்க முடியவில்லை. கப்பலில் உள்ள எண்ணெய் அகற்றப்படாமல் இருந்ததால், அது கடலில் கசிந்து மீனவா்கள் பாதிக்கப்பட்டதாக புகாா் எழுந்தது. இதைத் தொடா்ந்து கப்பலில் இருந்த எண்ணெய் அகற்றப்பட்டது.

இந்நிலையில், கப்பலை முழுமையாக உடைத்து அப்புறப்படுத்த நிறுவனத்தினா் முடிவெடுத்தனா். இதன் அடிப்படையில், கப்பலின் ஒவ்வொரு பாகமாக அப்புறப்படுத்தும் பணியில் வெள்ளிக்கிழமை முதல் 100 போ் வரை ஈடுபட்டுள்ளனா். அடுத்த ஒருவாரத்தில் கப்பலின் பாகங்கள் பிரிக்கப்பட்டு, அந்தப் பகுதியிலிருந்து கப்பல் முழுமையாக அப்புறப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.