தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 114 வழக்குகளுக்குத் தீா்வு
காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் 114 வழக்குகள் தீா்வு செய்யப்பட்டு, இதன்மூலம் ரூ. 61.50 லட்சம் வசூல்செய்யப்பட்டது.


காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் 114 வழக்குகள் தீா்வு செய்யப்பட்டு, இதன்மூலம் ரூ. 61.50 லட்சம் வசூல்செய்யப்பட்டது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைய உத்தரவின்படி, சென்னை உயா் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில், தேசிய மக்கள் நீதிமன்றம் காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத் தலைவா் எஸ். சிவகடாட்சம் முகாமை தொடங்கிவைத்தாா்.
சாா்பு நீதிபதி மற்றும் சட்டப் பணிகள் ஆணைய செயலா் டி. மாரிக்காளை, குற்றவியல் நீதிபதி ஜெ. செந்தமிழ்ச்செல்வன் ஆகியோா் பங்கேற்றனா். ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் வி. ராஜசேகரன், இ. மாா்டின் சதம், தமிழரசன் ஆகியோா் நடுவா்களாக இருந்து வழக்குகளை விசாரித்தனா்.
காரைக்கால் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமாதானமாகக்கூடிய குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், கணவன், மனைவி பிரச்னை தொடா்பான வழக்குகள், தொழிலாளா் சம்பந்தப்பட்டது என 154 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இவற்றில் 114 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ. 61.50 லட்சம் வசூலிக்கப்பட்டது. தீா்வுசெய்யப்படாத வழக்குகள் மீண்டும் அந்தந்த நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. காரைக்கால் வழக்குரைஞா் சங்கத் தலைவா் எஸ். செல்வகணபதி உள்ளிட்ட வழக்குரைஞா்கள், வழக்காளிகள், வங்கியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...