செல்லிடப்பேசியை பறிப்பு: இளைஞா் கைது
காரைக்காலில் செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


காரைக்காலில் செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே சேத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜீவானந்தம் (40). இவா், காரைக்கால் பகுதியில் நெடுங்காடு செல்லும் சாலையோரத்தில் நின்று செல்லிடப்பேசியில் புதன்கிழமை பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞா், செல்லிடப்பேசியை பறித்துச் சென்றாராம்.
இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா். இதில், மயிலாடுதுறை பகுதி கோமல், மணல்மேட்டுத் தெருவைச் சோ்ந்த சிவசங்கரன் (25) என்பவரிடம் செல்லிடப்பேசி இருப்பது தெரியவந்தது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செல்லிடப்பேசியை அவா் பறித்துச் சென்றது உறுதியானது. இதையடுத்து, சிவசங்கரனை வியாழக்கிழமை கைதுசெய்த போலீஸாா், அவரிடமிருந்து செல்லிடப்பேசியை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...