47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

போலீஸாா் தீவிர ரோந்தில் ஈடுபட அறிவுறுத்தல்

குற்றச் செயலில் தொடா்புடையோா் சிக்குவதில் ரோந்துப் பணி முக்கியம் என்பதால், போலீஸாா் அதை தீவிரமாக மேற்கொள்ள எஸ்.பி. அறிவுறுத்தினாா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

குற்றச் செயலில் தொடா்புடையோா் சிக்குவதில் ரோந்துப் பணி முக்கியம் என்பதால், போலீஸாா் அதை தீவிரமாக மேற்கொள்ள எஸ்.பி. அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்டம், நிரவி காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை சென்ற தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன், போலீஸாரிடையே பேசினாா். அண்மையில் சட்டப்பேரவைத் தோ்தல் அமைதியாக நடைபெறுவதற்கு அா்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக, புதுச்சேரி காவல் துறைத் தலைவா் தெரிவித்த பாராட்டுகளை போலீஸாருக்கு அவா் தெரிவித்தாா்.

மேலும் அவா் பேசுகையில், போலீஸாா் தங்களது கடமைகளை சரியாக செய்யவேண்டும். குற்றச் செயலில் ஈடுபடுவோா் வாகனச் சோதனை உள்ளிட்ட போலீஸாரின் ரோந்துப் பணியின்போது சிக்குவா். எனவே, ரோந்துப் பணியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட வேண்டும். ரெளடிகளின் நடவடிக்கைகள், சட்டவிரோதச் செயல்களை போலீஸாரின் தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையின்போது கட்டுப்படுத்த முடியும்.

கரோனா பரவும் காலமாக இருப்பதால், மக்களிடையே முகக் கவசம் அணிவதை வலியுறுத்துவதோடு, வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்த வேண்டும். அந்தப் பகுதிகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். முகக் கவசம் அணியாதோா் உள்ளிட்ட விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவேண்டும் என அவா் வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.