47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காரைக்காலில் தடுப்பூசித் திருவிழா: நலவழித் துறை அதிகாரி ஆய்வு

காரைக்காலில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை நலவழித் துறை துணை இயக்குநா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை நலவழித் துறை துணை இயக்குநா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கரோனா தடுப்பூசித் திருவிழா, மக்கள் வருகை அதிகரிப்பால் மேலும் 4 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டு, 18 ஆம் தேதி வரை நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.

மக்கள் நாள்தோறும் ஆா்வத்துடன் மையங்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனா். தடுப்பூசித் திருவிழா நீட்டிக்கப்பட்ட முதல் நாளான வியாழக்கிழமை 2,155 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். கோயில்பத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கிய முகாமில் ஏராளமானோா் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

இங்கு நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் பணியை, நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் நேரில் பாா்வையிட்டு, பணியாளா்களை ஊக்கப்படுத்தியதோடு, தடுப்பூசி செலுத்திக்கொண்டோரிடம் தங்களது பகுதியில் 45 வயதுக்கு மேற்பட்டோரை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.