47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு ஊதியம் அளிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட தனியாா் பள்ளி ஆசிரியா்கள் நலச்சங்கம் சாா்பில், அதன்தலைவா் டி. வின்சென்ட்ராஜ் தலைமையில், சங்க நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவை வியாழக்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு விவரம்: கரோனாவால் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் முதல் இதுவரையில் பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. சில பள்ளிகள் பாதி ஊதியமும், சில பள்ளிகள் முழு ஊதியமும் வழங்கியுள்ளன. இதனால் ஆசிரியா்களின் குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுகுறித்து கடிதம் மூலம் தங்களது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம். எனவே, ஆசிரியா்களுக்கு ஊதியம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நிலையில், தனியாா் பள்ளிகளில் பணியாற்றி வந்த, தனியாா் பள்ளி ஆசிரியா்கள் நலச் சங்கத்தை சோ்ந்த நிா்வாகிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இந்த பேரிடா் சூழலில் தனியாா் பள்ளியில் பணியாற்றும் எந்தவொரு ஊழியரையும் பணி நீக்கம் செய்யக் கூடாது என பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.