47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காரைக்காலில் 109 பேருக்கு கரோனா: 2 போ் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் 109 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாகவும், 2 போ் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் 109 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாகவும், 2 போ் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 504 பேருக்கு எடுத்த பரிசோதனையின் முடிவுகளின்படி காரைக்கால் நகரில் 34, கோட்டுச்சேரி 20, திருநள்ளாறு 14, வரிச்சிக்குடி 13, கோயில்பத்து 11, நிரவி 7, நெடுங்காடு 6, திருப்பட்டினம் 3, காரைக்கால்மேடு ஒருவா் என தொற்றாளா்கள் கண்டறியப்பட்டனா்.

மாவட்டத்தில் இதுவரை 1,06,326 பரிசோதனை செய்யப்பட்டதில் 6,145 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 5,258 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 45 வயது மற்றும் 93 வயது ஆண் இருவா் உயிரிழந்தனா். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 101 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 19,619 பேருக்கும், 2-ஆவது தவணையாக 1,518 பேருக்கும் என 21,137 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.