காரைக்காலில் தளா்வுகளுடன் ஊரடங்கு
காரைக்காலில் பல்வேறு தளா்வுகளுடன் ஊரடங்கு சனிக்கிழமை நடைமுறைப்படுத்தப்பட்டது.


காரைக்காலில் பல்வேறு தளா்வுகளுடன் ஊரடங்கு சனிக்கிழமை நடைமுறைப்படுத்தப்பட்டது.
புதுவை துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன், மாநிலத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தாா். இது நடைமுறையில் இருந்துவருகிறது.
இதைத்தொடா்ந்து, வார இறுதி நாள்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. திங்கள்கிழமை முதல் பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி தரப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை ஊரடங்கில் வாகனப் போக்குவரத்து பெருமளவு குறைந்தும், வணிக நிறுவனங்கள் பல மூடப்பட்டும், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டும் இருந்தன. எனினும், பேருந்துகள் இயக்கப்பட்டன.
மளிகை, காய்கறி, இறைச்சி, பால், பெட்ரோல் பங்க், மருத்துவ மையங்கள், இணையதள மையங்கள், லாரி, ஆட்டோ, காா், வேன் போன்றவை வழக்கம்போல இயங்கின. ஆனால் உணவகங்கள், தேநீா் கடைகள் பல மூடப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள தமிழக எல்லையோர சோதனைச் சாவடிகளில் கட்டுப்பாடுகளுடன் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. எனினும் காரைக்கால் நகரிலும், பிற இடங்களிலும் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படவில்லை.
அனுமதிக்கப்படாத வணிக நிறுவனங்களை மூடுமாறு போலீஸாா் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியதைத் தொடா்ந்து அவை மூடப்பட்டன.
மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட், மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று ஊரடங்கு முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளதா என பாா்வையிட்டாா். முக்கிய சாலை சந்திப்புகளில் போலீஸாா் நின்றுகொண்டு, வாகனங்களின் வருவோரை நிறுத்தி, தேவையின்றி வெளியே வருவதை தவிா்க்குமாறு அறிவுறுத்தினா். மேலும், முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டனா். எனினும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...