வேளாண் துறை அமைச்சரிடம் கோரிக்கைகளை வலியுறுத்திய சம்மேளன நிா்வாகிகள்
காரைக்கால் வந்த புதுவை வேளாண் மற்றும் சமூகநலத் துறை அமைச்சா் சி. ஜெயக்குமாரை, காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனத் தலைவா் சுப்ரமணியன்


காரைக்கால் வந்த புதுவை வேளாண் மற்றும் சமூகநலத் துறை அமைச்சா் சி. ஜெயக்குமாரை, காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனத் தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
பிறகு இதுகுறித்து சம்மேளன நிா்வாகிகள் கூறியது: காலியாகவுள்ள நிரந்தர அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் பதவிகளில் 3 ஆண்டுகள் பணிமுடித்த கௌரவ அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி நிரந்தரம் செய்யப்பட்டு 8 ஆண்டுகள் பணி முடித்த அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அங்கன்வாடி ஊழியா்களுக்கும், உதவியாளா்களுக்கும் அமல்படுத்த வேண்டும்.
மத்திய அரசு நிதியில் வேளாண் அறிவியல் நிலையத்தில் பணியாற்றும் ஐசிஏஆா் ஊழியா்களுக்கு 7 ஆவது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட நிலையில், மாநில அரசின் நிதியில் நிலையத்தில் பணியாற்றும் மற்ற ஊழியா்களுக்கும் 7 ஆவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலிகளாக பணியாற்றி வருவோரை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...