திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு
திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.


திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் உள்ள நந்திக்கு மாதம் இருமுறையாக வளா்பிறை, தேய்பிறை காலத்தின்போது பிரதோஷ வழிபாடு நடத்தப்படுகிறது. ஆடி மாத 2-ஆவது பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோயில் கொடிமரம் அருகேயுள்ள பெரிய நந்திக்கு, வெள்ளிக்கிழமை சூரியன் அஸ்தமிக்கும் சமயத்தில் சிவாச்சாரியா்கள் சிறப்பு அபிஷேகம் செய்து, அருகம்புல் மாலை, மலா் மாலைகள், புது வஸ்திரம் சாற்றி சிறப்பு ஆராதனைகள் செய்தனா்.
இதேநேரத்தில், மூலவா் ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரருக்கும் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தா்கள் அருகம்புல் மாலை அணிவித்து நந்தியை வழிபாடு செய்தனா். தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் வழிபாட்டில் பங்கேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...