காரைக்காலில் 9 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 9 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.


காரைக்கால் மாவட்டத்தில் 9 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 452 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி கோயில்பத்து 5, நிரவி 3, திருநள்ளாறு 1 என மொத்தம் 9 பேருக்கு தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 1,80,779 பரிசோதனை செய்யப்பட்டதில் 15,101 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 14,745 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 240 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 87,250 பேருக்கும், 2-ஆவது தவணையாக 18,216 பேருக்கும் என 1,05,466 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...