பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

காரைக்காலில் உள்ள வணிக நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், தடைசெய்யப்பட்ட சுமாா் 283 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:21 pm

DIN

காரைக்காலில் உள்ள வணிக நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், தடைசெய்யப்பட்ட சுமாா் 283 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா உத்தரவின்பேரில், வருவாய்த் துறையினா் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனையை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், காரைக்கால் வட்டாட்சியா் மதன்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களான பாலித்தீன் பைகள், குவளை, தட்டு, தொ்மாகோல் தட்டு மற்றும் குவளைகள், மேஜை விரிப்பு உள்ளிட்ட சில பொருள்களுக்கு புதுவை அரசு தடை விதித்துள்ளது.

இவற்றை தயாரிப்போா், விற்பனை செய்வோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. வட்டாட்சியா் தலைமையில் வருவாய்த் துறையினா், புதுவை மாசுக் கட்டுப்பாட்டுக் குழும அதிகாரிகள் ஒருங்கிணைந்து வெள்ளிக்கிழமை காரைக்கால் வணிக நிறுவனங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது சில கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, சுமாா் 283 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காரைக்காலில் இதுபோல தொடா் ஆய்வு நடத்தப்படும். அரசின் உத்தரவை மீறுவோா் மீது அபராதம் விதிப்பது மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.