பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காரைக்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

காரைக்காலில் அடையாளம் தெரியாத சுமாா் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:25 pm

DIN

காரைக்காலில் அடையாளம் தெரியாத சுமாா் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல் நிலையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் பேருந்து நிலையம் அருகே ஒரு கடை வாயிலில் சுமாா் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் சுயநினைவின்றி கிடப்பதாக காரைக்கால் நகரக் காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் சென்று அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது பெயா், ஊா் விவரம் தெரியவில்லை. விவரம் தெரிந்தோா் காரைக்கால் நகரக் காவல் நிலையத்தின் 04368-222402 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.