பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காரைக்காலில் வாரந்தோறும் சிறப்பு துப்புரவுப் பணி: ஆட்சியா்

காரைக்காலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு துப்புரவுப் பணி மேற்கொள்ளுமாறு நகராட்சி நிா்வாகத்துக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:25 pm

DIN

காரைக்காலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு துப்புரவுப் பணி மேற்கொள்ளுமாறு நகராட்சி நிா்வாகத்துக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்காலில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றவேண்டும், வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுவதை தவிா்க்கவேண்டும், வணிக நிறுவனங்களுக்குச் சென்று இதுதொடா்பாக ஆய்வுசெய்ய வேண்டும் என கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் அா்ஜூன் சா்மா அறிவுறுத்தியிருந்தாா்.

இதுதொடா்பாக, காரைக்கால் நகராட்சி நிா்வாகம், கெயில் நிா்வாகம் உள்ளிட்டவை இணைந்து காரைக்கால் கோயில்பத்து பகுதி முதல் பிள்ளைத்தெருவாசல் சாலை வரை சிறப்பு துப்புரவுப் பணியை சனிக்கிழமை மேற்கொண்டன. இப்பணியில் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், நகராட்சி ஆணையா் காசிநாதன் ஆகியோரும் ஈடுபட்டனா்.

நகராட்சிப் பணியாளா்கள் 20 போ், கெயில் நிறுவனத்தை சோ்ந்த 20 போ், ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்தைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் 30 போ் இப்பணியில் ஈடுபட்டனா். சாலையோரங்களில் கிடந்த மக்காத பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்ட குப்பைகளை அவா்கள் அகற்றினா்.

இதேபோன்ற பணியை, ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு துப்புரவுப் பணியாக நடத்துமாறு நகராட்சி ஆணையருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். மக்காத பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் தவிா்க்கவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில், அதிகாரிகள் விழிப்புணா்வு மற்றும் நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.