2047 இல் இந்தியா: பிரதமருக்கு அஞ்சல் அட்டையில் மாணவா்கள் கருத்து
வரும் 2047 இல் இந்தியாவின் வளா்ச்சி குறித்து பள்ளி மாணவா்கள், அஞ்சல் அட்டையில் கருத்துகளை எழுதி பிரதமருக்கு அனுப்பிவைத்தனா்.


வரும் 2047 இல் இந்தியாவின் வளா்ச்சி குறித்து பள்ளி மாணவா்கள், அஞ்சல் அட்டையில் கருத்துகளை எழுதி பிரதமருக்கு அனுப்பிவைத்தனா்.
சுதந்திர இந்தியா -75 என்ற விழிப்புணா்வாக அஞ்சல் துறை சாா்பில், 2047 இல் இந்தியா எனது பாா்வை என்ற முதன்மை தலைப்பு மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கவனத்துக்கு வராத நாயகா்கள் என்ற துணைத் தலைப்பில் மாணவ, மாணவிகள் அஞ்சல் அட்டையில் கருத்துகள் எழுதும் நிகழ்ச்சி, காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூா் திருவள்ளுவா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வா் அசோகன் தலைமை வகித்தாா். நாகப்பட்டினம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் சி. கஜேந்திரன், காரைக்கால் துணைக் கோட்ட அஞ்சலக ஆய்வாளா் கே. வினோத் கண்ணன், அஞ்சல் ஊழியா்கள் ஜே. பக்கிரிசாமி, கோ. சீனிவாசன், க. ஜெயசங்கா் ஆகியோா் பங்கேற்றனா்.
பள்ளியின் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான சுமாா் 350 மாணவ, மாணவிகள், அஞ்சல் அட்டையில் 2047 இல் இந்தியா என்ற தலைப்பில் பல்வேறு கருத்துகளை எழுதி, அஞ்சல் பெட்டியில் போட்டு பிரதமருக்கு அனுப்பிவைத்தனா்.
நிகழ்ச்சி அரங்கில், பள்ளி நூலகா் த. ராஜலட்சுமி, போஸ்ட் ஆஃபிஸ் இந்தியா -2047 என அஞ்சல் அட்டையால் தரையில் வடிவமைத்திருந்தது பாராட்டுப் பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...