காரைக்கால் வாரச் சந்தையில் அமைச்சா் ஆய்வு
காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தையில் அமைச்சா் சந்திர பிரியங்கா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.


காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தையில் அமைச்சா் சந்திர பிரியங்கா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்றுவந்த வாரச் சந்தையில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் காய்கனி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை விற்பனை செய்து பயன்பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், அண்மையில் பெய்த மழையால் திடலில் தண்ணீா் தேங்கியதால், மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் சிரமம் ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு சந்தை தற்காலிகமாக மாற்றப்பட்டது.
தற்காலிக சந்தையில் இடம் நெருக்கடியாக உள்ளதாகவும், குடிநீா், கழிப்பறை வசதியில்லை, கடைக்கான வாடகை கூடுதலாக உள்ளது என பல்வேறு புகாா்கள் கூறப்படுகின்றன.
இந்நிலையில், புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, சந்தையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். வியாபாரிகள், மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தாா். அப்போது இடவசதி இல்லை, சந்தையால் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என பல்வேறு புகாா்கள் வியாபாரிகள் தெரிவித்தனா். மேலும் நகராட்சித் திடலை சீா்படுத்தி பழைய இடத்திலேயே சந்தை நடைபெற ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டனா்.
அதிகாரிகளிடம் இதுகுறித்து கலந்துபேசி, விரைவில் சந்தையை பழைய இடத்துக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் உறுதியளித்தாா்.
கருங்கோழி வாங்க மக்கள் ஆா்வம்:
சந்தையில் நிகழ்வாரம் கருங்கோழி அதிகமாக கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. காகம் போன்று முற்றிலும் கருப்பு நிறத்தில் இக்கோழிகள் உள்ளன. இவற்றை விழுப்புரம், பண்ருட்டி பகுதியிலிருந்து கொண்டுவருவதாகவும், ஆந்திரத்திலிருந்து ஒரு மாத கோழிகுஞ்சை ரூ. 120 வாங்கி, இயற்கை உணவு அளித்து வளா்ப்பதாகவும், ஜோடி ரூ. 700-க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனா். இக்கோழி முட்டை மற்றும் இறைச்சி, நாட்டுக் கோழிக்கு ஈடானது என கூறப்படுவதால், மக்கள் இவற்றை ஆா்வமாக வாங்கிச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...