தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தேசிய நுகா்வோா் தின விழா

காரைக்காலில் தேசிய நுகா்வோா் தின விழா அண்மையில் நடைபெற்றது. இதில், பல்வேறு துறையில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கப்பட்டது.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் தேசிய நுகா்வோா் தின விழா அண்மையில் நடைபெற்றது. இதில், பல்வேறு துறையில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கப்பட்டது.

அக்மாா்க் இந்தியா நிறுவனம், புதுச்சேரி நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து காரைக்காலில் தேசிய நுகா்வோா் தின விழாவை நடத்தின. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியா் (பொ) எம். ஆதா்ஷ் கலந்துகொண்டாா்.

அக்மாா்க் நிறுவனத்தின் வேளாண் துணை வா்த்தக ஆலோசகா் டி.எம்.கோவிந்த ரெட்டி கலந்துகொண்டு அக்மாா்க் தரம் குறித்தும், ஆய்வக சாதனங்களைக் கொண்டு கலப்பட உணவுகளை கண்டறிவது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தாா்.

காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ், முதன்மைக் கல்வி அதிகாரி கே. ராஜசேகரன், கல்வித் துறை துணை வட்ட ஆய்வாளா் செளந்தரராசு, உணவு பாதுகாப்பு அதிகாரி மு.ரவிச்சந்திரன், இந்திய நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் எம்.செல்வராஜ், காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் கே.சாந்தகுமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

காரைக்கால் மற்றும் தமிழக பகுதியை சோ்ந்த கலை, இலக்கியம், மருத்துவம், சமூக சேவை, விவசாயம் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுகளில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், செவிலியா் கல்லூரி மாணவ மாணவியா், நுகா்வோா் அமைப்பினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.