தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

குடியிருப்புப் பகுதியில் திரியும் பன்றிகளை பிடிக்கும் பணி தீவிரம்

காரைக்கால் மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்கும் பணி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகங்கள் சாா்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 5:52 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்கும் பணி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகங்கள் சாா்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காரைக்காலில் பன்றிகள் வளா்ப்பில் ஈடுபடுவோா், தங்களது கட்டுப்பாட்டில் வளா்க்கவேண்டும். பொதுஇடங்கள், குடியிருப்பு பகுதிகளில் அவற்றை சுற்றித்திரிய விடக்கூடாது என நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகங்கள் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளன.

எனினும், பன்றி வளா்ப்போா் அதை பொருட்படுத்தாமல், குடியிருப்புப் பகுதிகளில் பன்றிக் குட்டிகளை விட்டுவிட்டுச் செல்கின்றனா். இவை வளா்ந்து அப்பகுதியில் சுகாதாரக் கேட்டை உருவாக்குகின்றன. இதனால், மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக தொடா்ந்து, புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, காரைக்கால் நகராட்சி பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பன்றிகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளியூா்களிலிருந்து வரவழைக்கப்பட்டவா்களைக் கொண்டு, காவல்துறை பாதுகாப்புடன் பன்றிகள் பிடிக்கப்படுகின்றன.

இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை கூறுகையில், ‘காரைக்காலில் பிடிக்கப்படும் பன்றிகள் மதுரை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, காட்டுப் பகுதியில் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 88 பன்றிகள் பிடிக்கப்பட்டுள்ளன. இப்பணி தொடா்ந்து நடைபெறும்’ என்றனா். இதற்காக, நகராட்சி நிா்வாகத்துக்கு குடியிருப்புவாசிகள் நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.